அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவர்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அறிவிக்கிறார்கள் : "அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவர்".
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

"அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவர்", இது அனைவருக்குமான பொதுவான அறிவிப்பாகும். அல்குர்ஆனைக் கற்றல், கற்பித்தல் ஆகிய இரு பண்புகளையும் ஒருங்கிணைப்பவரே மக்களில் சிறந்தவராகும், அவர் ஒருவரிடம் கற்று, இன்னொருவருக்கு கற்பிக்கின்றார். ஏனெனில் அல்குர்ஆனைக் கற்பதுதான் மிகச் சிறந்த கலையாகும், அதனைக் கற்றல் மற்றும் கற்பித்தலானது அதன் வசனம், கருத்து அனைத்தையுமே குறிக்கின்றது. அல்குர்ஆனை மனனமிட்டு, அதனை மக்களுக்கு, ஓதவும், மனனமிடவும் கற்பிப்பவரும் இதில் அடங்குவார், அதேபோன்று குறித்தமுறையில் கற்றவரும் இதில் அடங்குவார். இரண்டாவது வகையான கருத்தைக் கற்றல் என்பது அல்குர்ஆன் விளக்கவுரைகளைக் கற்பதும் கற்பிப்பதுமாகும். ஒருவர் அதனைக் கற்று, மக்களுக்கு அல்குர்ஆனை விளங்கும் முறை, விளக்கும் முறைகளைக் கற்பித்து, அதன் பொதுவிதிகளைப் போதித்தால் அவரும் இந்தப் பாக்கியத்திற்கு உடந்தையாவார்.

  1. அல்குர்ஆனை கற்றல், அதனை ஓதும் முறை, அதனைப் போதிப்பதன் சிறப்பு இங்கு கூறப்பட்டுள்ளது.
  2. அல்குர்ஆனிலுள்ள சட்டங்கள், நற்பண்புகள், நற்குணங்களை செயற்படுத்துவதன் சிறப்பும் தெளிவாகின்றது.
  3. தான் கற்ற பின் அதனைக் கற்பிப்பது ஓர் அறிஞரின் கடமையாகும்.
  4. அல்குர்ஆனில் சில வசனங்களையாயினும் கற்றவருக்கு சிறப்பும், உயர்பதவியும் உண்டு.

வெற்றிகரமாக அனுப்பப்பட்டது