நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஆத் ரழியல்லாஹு அவர்களை யமன் நாட்டிற்கு அழைப்பாளராகவும், போதகராகவும் அனுப்பும் போது அவர் கிறிஸ்தவ சமூகத்தை சந்திக்கப் போவதையும், அதனால் அதற்குரிய ஆயத்தங்களுடன் செல்ல வேண்டும் என்பதையும் தனது அழைப்புப் பணியில் முக்கியமானவற்றில் ஆரம்பித்து தனது பிரச்சாரப்பணியை ஆரம்பிக்க வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தினார்கள். அந்த வகையில் முதலில் 'உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சி கூறுதல் எனும்; நம்பிக்கையைச் சரிபடுத்தலின் பால் அழைக்க வேண்டும். இதன் மூலம்தான் அவர்கள் இஸ்லாத்தினுள் நுழைவார். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களுக்கு தொழுகையை நிலைநாட்டுமாறு கட்டளையிட வேண்டும். ஏனெனில் ஒரிறைக் கொள்கையை ஏற்றதன் பின்னுள்ள மிகப்பெரும் கடமையாக தொழுகை காணப்படுகிறது. தொழுகையை அவர்கள் நிலைநாட்டினால் அவர்களில் உள்ள செல்வந்தர்களகள் தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கு ஸகாத் வழங்க வேண்டும் என பணிக்க வேண்டும். பின்னர் நபியவர்கள் அவர்களிடம் காணப்படும் விலையுயர்ந்த பொருள்களை ஸகாத்தாக பெறுவதை எச்சரித்தார்கள். ஏனெனில் ஸகாத் நடுத்தரமான பொருளிலிருந்தே பெறுதல் கடமையாகும். பின் அநியாயம் இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதினால் அவருக்கெதிராக பிரார்த்திக்கக் கூடாது என்பதற்காக அநியாயம் இழைப்பதை தவிர்ந்து கொள்ளுமாறு உபதேசம் செய்தார்கள்