நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் முஃமின்களுக்கு அல்லாஹ் வழங்கும் அளப்பரிய அருள் குறித்தும், காபிர்களுடனான அவனின் நீதி குறித்தும் விவரிக்கிறார்கள். முஃமினைப் பொறுத்தவரை அவன் செய்த நற்செயலுக்கான கூலியில் எதுவும் குறைக்கப்படமாட்டாது. மாறாக அவனின் வணக்கவழிபாட்டிற்காக அவனுக்கு உலகத்தில் நன்மை வழங்கப்படுவதுடன்,மறுமையில் அவனுக்குரியவை சேமிக்கப்படும். சிலபோது அவனுக்குரிய கூலிகள் அனைத்தும் மறுமையில் வழங்கப்படுவதற்காக பாதுகாக்கப்படும். காபிரைப் பொருத்தவரை இவ்வுலகில் அவன் செய்த புன்னியங்களுக்கான நன்மைகளை கூலியாக வழங்கிடுவான்.ஆனால் அவன் மறுமைக்காக சென்று விட்டால் அங்கே கூலியாக வழங்கப்பட எந்த வெகுமதியும் இருக்காது.இம்மை மறுமையில் நற்செயல்கள் பயனளிக்க குறித்த நபர் கட்டாயம் ஈமான் கொண்டிருத்தல் அவசியமாகும்.