கொலை விபச்சாரம் போன்ற விடயங்களில் அதிகம் ஈடுபட்ட இணைவைப்பாளர்களில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து நீங்கள் அழைக்கும் இஸ்லாம் அதன் போதனைகள் யாவும் மிகவும் சிறந்த விடயங்ளாகும். ஆனால் நாம் இணைவைப்பு மற்றும் பெரும்பவாங்களில் வீழ்த்துள்ளோம், அதனால் எமது நிலை எவ்வாறு அமையப் போகிறது? அதற்கு குற்றப்பரிகாரம் ஏதும் உண்டா என வினவினார்கள். அவ்வேளையில் மேற்படி இரண்டு வசனங்களும் இறங்கின. அதில் மனிதர்கள் எவ்வளவு பாவங்கள் செய்திருப்பினும் அவை எவ்வளவு பெரியதாக உள்ள போதும் அதற்கான தீர்வாக தவ்பாவை ஏற்படுத்தி அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என உத்தரவாதப் படுத்தியுள்ளான். அவ்வாறு அல்லாஹ் அவகாசம் அளிக்காதிருந்தால் அந்த இணைவைப்பாளர்கள் அவர்களின் இறைநிராகரிப்பிலும், அத்துமீறல்களில் தொடர்ந்து இருந்திருப்பார்கள் அது மாத்திரமல்லாது இந்த மார்க்கத்தினுள் நுழைந்திருக்கவும் மாட்டார்கள்.