நஜ்த் பிரதேசத்திலிருந்து ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்தார், அவரின் முடி சிதைந்து காணப்பட்டதோடு அவரின் தொணி மிகவும் உயர்ந்து காணப்பட்டது. அதனால் அவர் பேசியது ஒன்றும் புரியவில்லை. அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் மிகவும் நெருக்கமாகச் சென்று இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் குறித்து வினவினார் அதற்கு நபியவர்கள்; முதலில் தொழுகையைப் பற்றிக் கூறினார்கள். ஒரு நாளைக்கு ஜவேளைக் தொழுகைகளை அல்லாஹ் அடியார்கள் மீது கடமையாக்கியதாகக் குறிப்பிட்டார்கள். அதற்கு அம்மனிதர் இந்த ஐவேளைத் தொழுகைகளைத் தவிர்த்து வேறு கடமையான தொழுகைகள் உண்டா? எனக் கேட்டார் அதற்கு நபியவர்கள் இல்லை, நீயாக விரும்பிச் செய்யும் நப்லான தொழுகைகள் தவிர என்று பதில் கூறினார்கள். அதன் பின் நபியரவர்கள் உம்மீது அல்லாஹ் ரமழான் மாதத்தில் நோன்பை கடமாக்கியுள்ளான் என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் ரமளான் நோன்பு தவிர்த்து வேறு கடமையான நோன்புகள் என்மீது உண்டா எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் இல்லை, நீயாக விரும்பி நோற்கும் உபரியான நோன்புகளைத் தவிர என்று பதில் கூறினார்கள். பின்னர் ஸகாத் பற்றிக் குறிப்பிட்டார்கள். அதற்கு அம்மனிதர் பர்ழான ஸகாத் தவிர்த்து வேறு கடமையான தர்மங்கள்; என்மீது உண்டா எனக் கேட்டார்? அதற்கு நபியவர்கள் இல்லை, நீயாக விரும்பி செய்யும் தர்மங்கள்; தவிர என்று பதில் கூறினார்கள். இந்த அடிப்படைக் கடமைகள் பற்றி கேட்டதன் பின் அம்மனிதர் இந்தக் கடமைகளை எவ்விதக் கூட்டலும் குறைவவுமின்றி நிறைவேற்றுவதாக சத்தியம் செய்தவராக திரும்பிச்சென்றார்