எந்த இணையும் இல்லாத உண்மையான இறைவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே எனவும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹவிவஸல்லம் அவர்களின் தூதுத்துவத்தை உண்மைப்பாடுத்தி சாட்சி கூறும் வரையில் இணைவைப்பாளர்களுடன் போராடுமாறு தனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகிறார்கள். அத்துடன் அந்த சான்று பகர்தலின் அடிப்படையில் தினமும் ஐவேளைத் தொழுகைகளை நிலைநாட்டுதல், தகுதியானோருக்கு கடமையான ஸகாத்தை வழங்குதல் போன்ற விடயங்களை செய்யுமாறு குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்தால் இஸ்லாம் அவர்களின் உயிருக்கும் உடமைகக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குகிறது. ஆகவே அவர்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கேட்ப கொலை செய்யப்டுவதற்குரிய குற்றங்களை செய்தாலே தவிர அவர்களை கொல்வது அனுமதிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவர்களின் இரகசியவிவகாரங்கள் குறித்த விசாரணையை அல்லாஹ் பொறுப்பேற்பான்.