ஸஹாபாக்கள் நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுடன்; பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது திடீரென ஒட்டகத்தின் மீது அமர்ந்த ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். ஒட்டகத்தைப் படுக்க வைத்துப் பின்னர் அதனைக் கட்டினார். என அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். பின்னர் அவர் ,அமர்ந்திருந்த ஸஹாபாக்களிடம் உங்களில் முஹம்மத் யார்? என வினவினார். நபியவர்களோ கூட்டத்திற்கு மத்தியில் சாய்ந்து கொண்டிருந்த நிலையில், நாம் இதோ சாய்ந்து கொண்டிருக்கும் வெள்ளை மனிதர்தாம் முஹம்மத் என்று கூறினோம். வந்த மனிதர் அப்துல் முத்தலிபின் மகனே : என நபியவர்களைப் பார்த்து விளித்துப்பேச, நபியவர்கள் அவரிடம் நீங்கள் கூறுவதை நான் செவி மடுத்தேன்; நீங்கள் கேளுங்கள் நான் உமக்கு பதிலளிக்கிறேன். வந்த மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் கேட்கப் போகிறேன். அதற்காக நீங்கள் என்னுடன் -வருத்தப்படக்- கோபப்பட வேண்டாம்' என்றார். அதாவது நீங்கள் கோபிக்கக் கூடாது அத்துடன் ஏதும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டாம். அதற்கு நபியவர்கள் நீ விரும்பியதைக் கேள் என்று அவரிடம் கூறினார்கள். 'உமதும், உமக்கு முன்பிருந்தோரினதும் இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன் அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுமைக்கும் தூதராக அனுப்பினானா?' அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வை சாட்சியாக வைத்து ஆம் என்று கூறினார்கள் 'அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உம்மிடம் கேட்கிறேன் அல்லாஹ்தான் இரவிலும், பகலிலுமாக நாங்கள் ஐந்து நேரத் தொழுகையைத் தொழுது வரவேண்டு மென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?அதாவது கடமையான தொழுகைகளை இது குறிக்கிறது. இதற்கு நபியவர்கள் அல்லாஹ் சாட்சியாக ஆம் எனக் கூறினார்கள் 'இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன் அல்லாஹ்தான் ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட மாதமாகிய ரமழான் மாதத்தில் நாங்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கு நபியவர்கள் அல்லாஹ் சாட்சியாக ஆம் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன் அல்லாஹ்தான் எங்களில் வசதி படைத்தவர்களிடமிருந்து இந்த (ஸகாத் என்னும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியவர்களுக்கு வினியோகிக்க வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' தர்மம் என்பது இங்கு ஸகாத்தைக் குறிக்கும். அதற்கு நபியவர்கள் அல்லாஹ் சாட்சியாக ஆம் எனக் கூறினார்கள். ழிமாம் அவர்கள்; இஸ்லாத்தை தழுவினார் நபி ஸல்லல்லாஹு அவர்கள் அவர் தனது சமூகத்தாரை இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுப்பார் என்று அறிவித்தார்கள். பின் அந்த மனிதர்; தான் ழிமாம் இப்னு ஸஃலபா ஸஃத் இப்னு பக்ர் வம்சத்தை சேர்ந்தவர்; என்று தம்மை அறிமுகப்படுத்தினார்.