நபியவர்கள் தனது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன் தனது சமூகத்திற்கு முக்கியமான ஒரு செய்தியை அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்விடம் தனக்கிருக்கும் இடத்தைப் பற்றிக் கூறுகின்றார்கள், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கிடைத்தது போன்று தனக்கும் நேசத்தின் அதியுயர் தரம் கிடைத்திருப்பதாகக் கூறுகின்றார்கள். இதனால்தான் அல்லாஹ்வை அன்றி வேறுயாரும் தனக்கு உற்ற தோழனாக இல்லையென மறுத்தார்கள், ஏனெனில் அன்னாரது உள்ளம் இறை நேசத்தாலும், அவனது மகத்துவத்தினாலும், அறிவாலும் நிரம்பியுள்ளது. எனவே அவனைத் தவிர வேறு யாருக்கும் அதில் இடமேதுமில்லை. அவ்வாறு படைப்பினங்களில் உற்ற தோழராக இருக்கும் ஒருவருக்கு அத்தகுதி இருப்பின் அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மாத்திரமே உண்டு. பின்னர், யூத, கிறிஸ்தவர்கள் செய்தது போன்று தமது நபிமார்களின் அடக்கஸ்தளங்களில் அங்கீகரிக்கப்பட்ட நேசத்தில் அளவுகடந்து சென்று, அல்லாஹ்வையன்றி வணங்கப்படும் அல்லாஹ்வுக்கு இணையான கடவுள்களாக மாற்றியதை எச்சரித்தார்கள். அது மாத்திரமின்றி அவற்றின் மீது வழிபாட்டுத்தளங்களை அமைத்தார்கள். இது போன்ற பாதகச் செயலை அவர்களைப்போன்று செய்ய வேண்டாமென தனது சமூகத்தைத் தடுத்தார்கள்.