யார் தனது நாவினால் 'லாஇலாஹ இல்லல்லாஹ்' அதாவது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என மொழிந்து, அல்லாஹ்வைத் தவிர மற்றவை அனைத்தும் வணங்கத் தகுதியற்றவை என நிராகரித்து, ஏனைய மதங்களைத் தவிர்த்து இஸ்லாத்தை மாத்திரம் மார்க்கமாக ஏற்றுக்கொள்பவரின் உயிரும் உடமையும் முஸ்லிம்களுக்கு புனிதமாகும். அவனின் புறச்செயற்பாடுகளை மாத்திரமே கருத்திற் கொள்ள வேண்டும். எனவே அவனின் சொத்துக்களை பரிமுதல் செய்யவோ –அபகரிக்கவோ, அவனின் இரத்தத்தை ஓட்டவோ- கொலைசெய்யவோ முடியாது. ஆனால் இஸ்லாமிய சட்ட ஒழுங்குக்குட்பட்ட ஏதாவது ஒரு குற்றத்தை அல்லது பாவகாரியத்தை செய்துவிட்டால் அதற்கான தண்டனை நிறைவேற்றப்படும். மறுமை நாளில் அல்லாஹ் அவனை விசாரிப்பதை பொறுப்பேற்பான், அவன் உண்மையாளனாக இருந்தால் அதற்கு வெகுமதி வழங்குவதோடு, அவன் நயவஞ்சகனான இருந்தால் அவனிற்கு வேதனையளிப்பான்.