நரகவாதிகளுள் மிகக் குறைந்த தண்டனையைப் பெறும் ஒரு அடியானிடத்தில் அவன் நரகில் நுழைந்த பின் ' உமக்கு உலகமும் அதிலுள்ளவைகளும் சொந்தமாயிருப்பின் இந்த வேதனைக்கான இழப்பீடாக அவற்றை செலுத்துவாயா? என்று மறுமையில் அல்லாஹ் வினவுவதாக குறிப்பிடுகிறார்கள். அதற்கு அந்த அடியான் 'ஆம்'என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் அவனிடம் 'நீ ஆதமின் முதுகுத் தண்டில் இருக்கும் போது, உம்மிடம் உடன்படிக்கை எடுக்கும் வேளை இதனை விடவும் மிகவும் இலகுவான ஒருவிடயமான ''எனக்கு எதனையும் இணைவைக்கலாகாது ' என்று வேண்டிக் கொண்டேன். ஆனால்; நான் உன்னை பூமிக்கு அனுப்பியபோது, நீ மறுத்து ஷிர்க்கைத் தேர்ந்தெடுத்தாய் என்று கூறுவான்.