ஒரு முஸ்லிம் தனது பேச்சில் 'மாஷா அல்லாஹ் வஷாஅ புலான்' ( குறித்த விடயமானது அல்லாஹ்வின் விருப்பப்படியும், குறித்த நபரின்; விருப்பப்படியும் நடந்தது) அல்லாஹ்வும் இன்னாரும் நாடியது, அல்லது 'மாஷாஅல்லா வபுலான்' அல்லாஹ்வினதும்; குறித்த நபரினதும் விருப்பப்படி நடந்துவிட்டது என்று கூறுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தடுத்துள்ளார்கள். காரணம் அல்லாஹ்வின் நாட்டம் மற்றும் அவனின் விருப்பம் பொதுவானது அதில் எவரும் கூட்டுச்சேர முடியாது. குறித்த வசனத்தில் 'வாவ் ' என்ற எழுத்தானது வாவுல் அத்ப் ஆகும். அது ஒருவிடயத்தை சமமாக இணைத்துச் சொல்வதற்கு பாவிக்கப்படும் எழுத்தாகும். அந்தவகையில் அது அல்லாஹ்வுடன் ஒருவர் சமமாக கூட்டுச்சேர்வதை காட்டுகிறது ஆகையால் அவ்வாறு பாவிப்பது தடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் மாஷாஅல்லாஹு ஸும்ம ஷாஆ புலான்' அதாவது அல்லாஹ் நாடியதன் பின் குறித்த மனிதன் நாடியதும் நிகழ்ந்து விட்டது என்று கூறுவதில் எந்தத் தடையுமில்லை. ஆக அடியானின் விருப்ப-நாட்ட-மானது அல்லாஹ்வின் நாட்டத்தை பின்பற்றியதாக உள்ளது. இதனையே நபியவர்கள் 'வாவுக்குப் பதிலாக ஸும்ம என்ற முன்இடைச்சொல்லை பயன்படுத்தியுள்ளார்கள். ஸும்ம என்பது ஒரு விடயம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து அல்லது பின்னால் அல்லது தாமதித்து நிகழும் அனைத்திற்கும் பயன்படுத்தப்படும் முன்னிடைச்சொல்லாகும்.