நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'தவாகி'க்கள் மீது சத்தியம் செய்வதைத் தடை செய்கிறார்கள். 'தவாகி' என்பது 'தகியா'.என்ற ஒருமைச் சொல்லின் பன்மையாகும். இச்சொல்லானது, அல்லாஹ்வுக்குப்பதிலாக இணைவைப்பாளர்கள் வணங்கிய ஜாஹிலிய்யாக் கால சிலைகளைக் குறிக்கும். இதுவே அவர்களின் அத்துமீறல்களுக்கும் சத்தியத்தை நிராகரிப்பதற்கும் காரணமாக அமைந்தன. அதேபோல மூதாதையர்களின் மீது சத்தியம் செய்வதை தடை செய்துள்ளார்கள். ஏனென்றால் இஸ்லாத்திற்கு முந்தைய காலமான ஜாஹிலியயாக் காலத்தில், அரேபியர்கள் தங்கள் மூதாதையர் மீது பெருமை மற்றும் மரியாதையின் நிமித்தம் சத்தியம் செய்து வந்தனர்.