உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அபீ ஸீனியாவில் இருக்கும் போது அங்கு தாம் கண்ட மாரியா என்றழைக்கப்படுகின்ற தேவாலயத்தைப் பற்றியும், அதன் அலங்காரங்கள், உருவச் சிலைகளின்,படங்கள் போன்றவற்றை வியந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் தெரிவித்தார்கள். உடனே நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வாறான படங்களை வைத்ததன் பின்னனியை விளக்கினார்கள் நீர் குறிப்பிடும் அவர்கள் தங்களுக்கு மத்தியில் வாழ்ந்த நல்லமனிதர் ஒருவர் மரணித்துவிட்டால் அவரின் மண்ணறையின் மீது ஒரு பள்ளியைக் கட்டி அதில் அவர்கள் தொழுவார்கள், மற்றும் இவ்வாறான சிலைகளைப் படைத்து பதித்துவிடுவார்கள். இந்த செயலானது அல்லாஹ்வுக்கு இணைவைப்பின் பால் இட்டுச்செல்வதன் காரணமாக இக்காரியத்தை செய்பவர் அல்லாஹ்விடத்தில் மிகவும் கெட்ட மனிதராக இருப்பார் எனத் தெளிவுபடுத்தினார்கள்.