இங்கு உம்முல் முஃமினீன் ஆஇஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபியவர்கள் மீண்டெழாத அந்த மரணப் படுக்கையில் இவ்வாறு கூறினார்கள் : யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபித்து, தனத அருளை விட்டும் அவர்களைத் தூரப் படுத்தட்டும். ஏனெனில் அவர்கள் தமது நபிமார்களின் மண்ணறைகள் மீது கட்டிடங்கள் கட்டியோ, அவற்றை நோக்கி அல்லது அவற்றிற்கு அருகாமையில் தொழுதோ அவற்றைத் தொழுமிடங்களாக மாற்றிக்கொண்டார்கள்.' பின்பு ஆஇஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : நபியவர்களது இந்தத் தடையும் எச்சரிக்கையும் இல்லாவிட்டால், மேலும், யூத, கிறஸ்தவர்கள் தமது நபிமார்களின் கப்ருகளுக்குச் செய்ததது போன்று, நபியவர்களது கப்ருக்கும் செய்யப்படலாம் என்று நபித்தோழர்கள் பயப்படவும் இல்லையென்றிருந்தால், அவர்களது கப்ரும் வெளிக்காட்டப்பட்டிருக்கும்.