எவ்வித சரியான வழிகாட்டலோ அறிவோ இன்றி மார்க்கத்திலும் உலக விவகாரங்களிலும், வார்த்தை மற்றும் செயல்களிலும் தீவிரமாகவும் கடுமையாகவும் நடந்துகொள்வோரின் கைசேதம் மற்றும் அழிவு பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் நபியவர்கள் கொண்டுவந்த ஷரீஆ வரம்புகளை மீறி நடந்தோர்களாவர்.