நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸலல்லம் அவர்கள் உருவச்சிலைகளை எதனையும் விட்டுவைக்காது அதனை நீக்கி அழித்து விடுமாறு தனது தோழர்களை அனுப்பிவைப்பவர்களாக இருந்தார்கள். திம்ஸால் என்பது செதுக்கப்படட்ட, செதுக்கப்படாத சிலையைக் குறிக்கும். மேலும் தரைமட்டத்தை விட உயர்ந்திருக்கும் மண்ணறைகளை நிலமட்டத்துடன் சமப்படுத்தி விடுமாறும், அல்லது ஒரு சான் அளவு மட்டத்தில் உயர்ந்த கப்ருகளை வைக்குமாறும், கட்டப்பட்ட மண்ணறைகளை இடித்து விடுமாறும் வழிப் படுத்தி நபியவர்கள் தமது தோழர்களை பல பகுதிகளுக்கும் அனுப்பிவைத்தார்கள்.