இந்த ஹதீஸில் அல்லாஹ் மூதாதையர்களின் மீது சத்தியம் செய்வதை தடுத்ததாக நபி ஸல்லலல்லாஹுஅலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள். யார் சத்தியம் செய்ய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வைத்தவிர வேறு எதிலும் சத்தியம் செய்ய வேண்டாம். இந்த செய்தியை உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கேட்டது முதல் அவர் விரும்பியோ அல்லது பிறரின் செய்தியை உறுதிப்படுத்துவதற்காகவோ அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வதை தடுத்துக்கொண்டதாக குறிப்பிடுகிறார்கள்.