எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மறைவான விடயங்களைப் பற்றி அறிவிக்கும் சோதிடர்களைப் பற்றி சிலர் நபியவர்களிடம் வினவ, அதற்கு அவர்கள், அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம், அவர்களது பேச்சுக்களை எடுக்கவும் வேண்டாம், அவர்களை கணக்கில் கொள்ள வேண்டாம் எனக் கூறினார்கள். அப்போது சிலர் அவர்கள் கூறுவது யதார்த்தத்திற்கு உடன்படுகின்றதே, இன்ன மாதத்தில், இன்ன தினத்தில் நடைபெறும் என மறைவான ஒன்றை அவர்கள் அறிவித்தால் அவர்களது கூற்றுப் பிரகாரமே நடக்கின்றதே எனக் கேட்டனர். வானத்தில் பேசப்படும் செய்திகளை ஒத்துக்கேட்டு, தமது சோதிட நேசர்களிடம் இறங்கி தாம் கேட்டவற்றைக் கூறி விடுகின்றனர், பின் அந்த சோதிடன் தான் கேட்டவற்றில் மேலும் நூறு பொய்களைக் கலந்து விடுகின்றான் என நபியவர்கள் விளக்கமளித்தார்கள்.