நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஃது ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'தன் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ள (நா)வையும், தன் இரு கால்களுக்கிடையே உள்ள மறைவுறுப்பையும் (பாவத்திலிருந்து பாதுகாப்பதாக) எவர் எனக்கு உத்தரவாதமளிக்கிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் உத்தரவாதம் அளிக்கிறேன்'. சரியானது - இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
explain-icon

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரண்டு விடயங்கள் குறித்து அறிவித்துள்ளார்கள். ஒரு முஸ்லிம் பின்வரும் இரண்டு விடயங்களை கடைப்பிடித்து வாழ்ந்தால் அவன் சுவர்க்கம் நுழைவான்' முதலாவது : அல்லாஹ்வை கோபப்படுத்தும் விடயங்களை பேசுவதை விட்டும் நாவை பாதுகாத்தல் . இரண்டாவது : மானக்கேடானவற்றில் வீழ்வதை விட்டும் மறையுறுப்பை பாதுகாத்தல். மேலே குறிப்பிடப்பட்ட இரு உறுப்புகளினாலும் அதிக பாவச்செயல்களும் குற்றங்களும் நிகழ்கின்றன

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • மறையுறுப்பையும், நாவையும் பாதுகாப்பது சுவர்க்கம் செல்வதற்கான வழியாக அமையும்.
  • நாவையும் மறையுறுப்பையும் விஷேடமாகக் குறிப்பிட்டதற்கான காரணம் அவை இரண்டுமே மனிதனின் இம்மை மறுமை துன்பத்திற்கும் சோதனைக்கும் மிகப்பெரும் அடிப்படையாக இருப்பதினாலாகும்.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு