முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் சொர்க்கத்தின் சில இன்பங்கள் குறித்து குறிப்பிடுகிறார்கள்: சொர்க்கத்தில் ஒரு முஃமினுக்கு, மிகப் பிரமாண்டமானதும் விசாலமுமான ஒரு பெரிய கூடாரம் இருக்கும். அது துளையிடப்பட்ட ஒரு காலியான முத்தினால் உருவாக்கப்பட்டிருக்கும். அதன் அகலமும் நீளமும் வானில் அறுபது மைல் அளவு இருக்கும். அந்த கூடாரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், திசையிலும், நான்கு மூலைகளிலும் மனைவிகள் இருப்பார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் காணமாட்டார்கள். அந்த முஃமின் அவர்களிடையே சென்று வருவார்.