ஒரு மனிதனுக்கு தனது செருப்பின் வார் எவ்வளவு சமீபமாக உள்ளதோ அதேபோன்று சுவனமும் நரகமும் அவனுக்கு சமீபமாக உள்ளதாக நபியவர்கள் இந்த ஹதீஸில் அறியத் தருகின்றார்கள். ஏனெனில் அவன் சிலவேளை அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் ஒரு வணக்கத்தைச் செய்வான், அது அவனை சுவனத்தில் நுழைவித்து விடுகின்றது. சிலவேளை அவன் ஒரு பாவத்தைச் செய்திருப்பான். அவனை நரகில் அவன் அறியாமலே பல வருடங்கள் தள்ளி விடுகின்றது.