இங்கு நபியவர்கள், உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் கூறுவதாகப் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள் : என்னுடைய நல்லடியார்களைக் கண்ணியப் படுத்தும் விதமாக, சுவனத்தில் எந்தக் கண்களும் காணாத, வர்ணனையால் எந்தக் காதும் கேட்டிராத, யதார்த்த்தால் எந்த உள்ளத்திலும் தோன்றிராத பலவற்றை நான் ஏற்பாடு செய்துவைத்துள்ளேன். அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் விரும்பினால், "அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) 'எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது". என்ற வசனத்தை ஓதிப் பாருங்கள். (அஸ்ஸஜ்தா : 17)