செல்வந்தர்களை விட ஏழைகள்முதலில் சுவர்க்கம் செல்வர்.ஏனெனில் அவர்கள் செல்வமற்ற ஏழைகளாக இருந்தபடியால் அவர்களிடம் அது பற்றிய விசாரணை எதுவும் இருக்காது.இது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் கண்ணியமும்,அவர்கள் உலகில் இழந்த சௌபாக்கியங்களின் நஷ்டயீடுமாகும்.ஆனால் அழியும் பாக்கியங்களான செல்வம்,பட்டம், பதவிகளின் சொந்தக் காரர்களான செல்வந்தர்களோ மறுமையில் பெரிய மைதானத்தில் விசாரணைக்காக நீண்ட நேரம் காத்திருப்பார்கள்.இது அவர்களின் அதிக செல்வம், உயர்ந்த அந்தஸ்து என்பவற்றின் மூலம் அவர்கள் தங்களின் மனோ இச்சைகளுக்கு இசைவாக உலகில் அனுபவித்து வந்த சுகபோகங்களின் விளைவே.ஏனெனில் உலகில் அனுபவித்து வந்த ஹலாலான விடயங்களுக்காக விசாரணையும்,ஹராமான விடயங்களுக்காகத் தண்டணையும் உண்டு.ஆனால் ஏழைகளோ இதனை விட்டும் நீங்கியவர்கள்.மேலும் நரகில் அதிகம் பிரவேசிக்கின்றவர்கள் பெண்களே.காரணம் அவர்கள் அதிகமாக முறையீடு செய்கிறவர்களாகவும், தங்களின் புருஷர்களின் நல்ல கருமங்களை நிராகரிக்கின்றவர்களாகவும் இருக்கின்றனர். என்பதனால்தான்என்பது இந்த ஹதீஸிலிருந்து தெளிவாகிறது.