உஸாமா இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சிலர் : நீங்கள் உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் குறித்து பேசுவதோடு அதனை முழுமையாக கலைவது குறித்து ஏன் முயற்சி செய்யக்கூடாது ? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், பொது நலன் நாடியும் குழப்பத்தை மேலும் தூண்டி விடாதிருக்கவும் இது குறித்து இரகசியமாக தான் கதைத்தாக அவர்களிடம் தெரிவித்தார். இதன் மூலம் அவர் தான் மக்கள் மன்றத்தில் -(பொதுத் தளத்தில்) தலைவர்களை கண்டிப்பதை (விமர்சிப்பதை) விரும்பவில்லை என்ற தனது நோக்கத்தை அவர்களிடம் முன்வைத்தார். அவ்வாறு பகிரங்கமாக கண்டிப்பது கலீபாவுக்கெதிரான அத்துமீறலுக்கு காரணமாக அமைவதோடு, குழப்பம் மற்றும் தீமையின் வாயிலை திறக்க வாய்ப்பாக அமைந்து விடும். ஆகையால் அதனை திறக்கும் முதலாவது நபராக தான் இருப்பதை விரும்பவில்லை என்று குறிப்பிட்டார். பின் உஸாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்: தான் தலைவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவுரை கூறுவதாகவும், யாரையும்- அவர் தலைவராக இருந்தாலும்- முகஸ்துதிக்காகப் புகழ்வதில்லை என்றும், அவர்கள் தன்னைப் பொய்யாகப் புகழ்வதற்காகப் புகழ்ந்து பேசுவதில்லை என்றும் கூறினார்கள். மறுமை நாளில் ஒரு மனிதன் கொண்டு வரப்பட்டு நரகத்தில் வீசப்படுவான் என்ற நபியவர்களின் ஹதீஸைக் கேட்ட பிறகு இவ்வாறு நடந்து கொள்வதாகக் குறிப்பிட்டார். நரக நெருப்பு மிகவும் தீவிரமாகவும் கடுமையாகவும் இருப்பதன் காரணமாக, அவரது குடல்கள் அவரது வயிற்றிலிருந்து வெளியேறும். அப்படிப்பட்ட நிலையில், கழுதை ஆலைக்கல்லைச் சுற்றிச் சுழல்வது போல அந்த நபர் தனது குடலுடன் சுற்றிக் கொண்டிருப்பார், இந்தக் காட்சியைப் பார்த்து, நரகவாசிகள் அவரைச் சூழ வட்டமாக ஒன்று கூடி, 'ஓ இன்னாரே!' நீர் எங்களுக்கு நன்மை செய்யும்படி கட்டளையிட்டு, தீமையை விட்டும் எங்களைத் தடுக்கவில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்கு நன்மை செய்யும்படி கட்டளையிட்டேன், ஆனால் நானே அதைச் செய்யவில்லை. நான் தீமையைத் தடுத்தேன், ஆனால் நானே அதில் ஈடுபட்டேன். என்று கூறினார்.