இங்கு நபியவர்கள், சுவனவாதிகள் சுவனத்தின் இன்பத்தில் இருந்துகொண்டிருக்கும் போது, ஒரு அழைப்பாளி அவர்களை அழைத்து இவ்வாறு கூறுவார் எனக் கூறுகின்றார்கள் : நீங்கள் இங்கு எந்த சிறிய நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக நிரந்தரமாக வாழலாம். நீங்கள், சிறிய மரணமாகிய, உறக்கம் கூட இல்லாமல் மரணமற்ற நிரந்தர வாழ்க்கை வாழலாம். நீங்கள் வயோதிபத்தை அடையாமல் நிரந்தரமாக வாலிபத்திலேயே இருக்கலாம். நீங்கள் கவலையும், சிரமமும் இல்லாமல் இன்பமாகவே வாழலாம். அதைத் தான் இவ்வசனம் கூறுகின்றது : "நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்."(ஸூரத்துல் அஃராஃப் : 43)