செயல்கள் ஆறு வகைப்படும்.மனிதர்கள் நான்கு வகையினர் உள்ளனர் என நபியவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகின்றார்கள். ஆறு செயற்பாடுகள் பின்வருமாறு: முதலாவது: யார் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காது மரணித்தால் அவனுக்கு சுவர்க்கம் கிடைக்கும். இரண்டாவது, அல்லாஹ்வுக்கு ஏதாவது ஒரு விடயத்தில் இணைவைத்த நிலையில் மரணித்தவருக்கு நிரந்தர நரகம் உண்டு. இவைகள் இரண்டும் சந்தேகமின்றி உறுதியாக மறுமையில் நிகழக்கூடிய விடயங்களாகும். மூன்றாவது : செய்வதற்கு எண்ணிய நல்ல காரியம். யார் ஒரு நல்ல காரியததை செய்ய வேண்டும் என நிய்யத் வைத்து (மனதால் செய்யவேண்டும் என உறுதி கொள்ளல்)அவர் தனது நிய்யத்தில் அவருடைய உள்ளம் நிறைவாக உணரும் அளவுக்கு உண்மையாளராக இருந்ததை அல்லாஹ் அறிகிறான்.இவ்வாறு இருக்கையில் அந்த நல்ல காரியத்தை செய்வதற்கு தடையாக ஏதோ ஒரு விடயம் குறுக்காக அமையுமானால் அதற்கான பூரண கூலியை அல்லாஹ் அவனுக்கு எழுதி விடுகிறான். நான்காவது: செய்து முடிந்த ஒரு தீமை. யார் ஒரு தீமையைச் செய்கிறாரோ அவருக்கு ஒரு தீமை எழுதப்படுகிறது. இந்த இரண்டு விடயங்களும் எந்த அதிகரிப்புமின்றி குறிப்பிட்ட செயலுக்குரிய ஒரே மாதிரியான கூலியைக் குறிக்கிறது. ஐந்தாவது: ஒரு நற்செயலுக்கான கூலி அதைப்போன்று பத்தாக வழங்கப்படுகின்றமை. யார் ஒரு நன்மையான காரியத்தை செய்ய மனதால் நினைத்து அதனை செய்தும் விடுகிறார். அந்த நற்செயலுக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன. ஆறாவது: ஒரு நற்செயலுக்கான கூலி 700 மடங்காக வழங்கப்படுகின்றமை. யார் ஒருவர் இறைவழியில் ஒரு விடயத்தில்; செலவு செய்கிறாரோ அதற்கான கூலி 700 மடங்காக எழுதப்படுகிறது. இது அடியார்கள் மீதான அல்லாஹ்வின் பேரருளும் பேருபகாரமுமாகும். மனிதர்கள் நான்கு வகையினர். அவர்களின் விபரம் பின்வருமாறு : முதலாமவர்: உலகில் வாழ்வாதாரத்தை தாராளமாகப் பெற்றவர் மாத்திரமின்றி அவர் விரும்பிய விதத்தில் அதனை அனுபவித்ததவர்; மறுமையில் பெரும் நெருக்கடிக்குள் இருப்பவர் இவர் இறுதியாக செல்லுமிடம் நரகமாகும் அவர்தான் காபிரான -இறைவனை மறுத்துவாழ்ந்த –செல்வந்தன். இரண்டாமவர் : இவ்வுலக வாழ்வில்; வசதி ஏதுமின்றி மிக வறுமையில் இருந்தவர், என்றாலும் மறுமையில் செல்வச்செழிப்பில் இருப்பவர் இறுதியில் சுவர்க்கம் செல்பவர் அவர்தான் அல்லாஹ்வை நம்பி வாழ்ந்த ஏழை முஃமின். மூன்றாமவர்: இவ்வுலகிலும் மறுமையிலும் நெருக்கடிக்கு உள்ளானவர் அவர்தான் அல்லாஹ்வை நிராகரித்து வாழ்ந்த ஏழை. நான்காமவர் : இவ்வுலகில் மறுமையிலும் செழுமையுடன் இருப்பவர் அவர்தான் அல்லாஹ்வை நம்பி வாழ்ந்த முஃமினான செல்வந்தர்.