முஃமின்களைத் தவிர வேறு எவறும் சுவர்க்கம் செல்லவே மாட்டார்கள் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அதே போல் பரஸ்பரம் நேசம் கொள்ளாதவரை முஸ்லிம் சமூகம் சீர்பெறவோ, ஈமான் பரிபூரணம் பெறவோ மாட்டாது. இவ்வாறு கூறிவிட்டு நேசத்தை ஏற்படுத்தும் விடயங்களில் மிகவும் சிறப்புக்குரிய விடயமொன்றின் பால் வழிகாட்டுகிறார்கள். அதுதான் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவதாகும். அல்லாஹ் தனது அடியார்களுக்கு வாழத்துரைக்கும் ஒன்றாக ஸலாத்தை ஏற்படுத்தித்தந்துள்ளான்.