ஒருவர் பெற்றெடுத்த குழந்தைகளில் பெண்பிள்ளைகளில் அல்லது ஆண்பிள்ளைகளில் மூவர் மரணித்து அதற்காக பொறுமை காத்து, நன்மையை நாடி அல்லாஹ்வின் இறைவிதியை பொருந்திக்கொண்டால் அக்குழந்தையின் பெற்றோரின் உடலை நரகம் தீண்டுவதை விட்டும் அல்லாஹ் ஹராமாக்கிவிடுகிறான். எனினும் அல்லாஹ்வின் திருவசனமான "உங்களில் எவரும் அதை கடக்காமல் இருக்க முடியாது" என்ற அல்லாஹ்வின் கூற்றின் அடிப்படையில் நரகத்தின் மீது அமைந்துள்ள பாலத்தை கடக்கும் போது ஏற்படும் சோதனையை அவர் எதிர்கொள்ள வேண்டும்.