உம்முல் முஃமினீன் ஆஇஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களது நற்குணங்கள் பற்றிக் கேட்கப்பட்ட போது அவர்கள், நபியவர்களது இயல்பிலேயே சொற்களிலோ, செயற்களிலோ அசிங்கமாக, கெட்ட விதமாக நடந்துகொள்பவராக இருக்கவில்லை எனவும், வேண்டுமென்றே சிரமப்பட்டு அவ்வாறு நடந்து கொள்பவராக இருக்கவில்லை எனவும் சந்தைகளில் சப்தங்களை உயர்த்திப் பேசுபவராக இருக்கவில்லை எனவும், ஒரு தீமைக்குக் கூலியாக இன்னொரு தீமையை செய்யமாட்டார்கள் எனவும், மாறாக உள்ளத்தால் மன்னித்து, வெளிப்படையில் புறக்கணித்து விடுவார்கள் எனவும் கூறுகின்றார்கள்.