நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறயதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யாரிடம் மென்மை இல்லையோ அவர் அதன் நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுவார். சரியானது - இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

மார்க்க மற்றும் உலக விவகாரங்களில்; மென்மையாக நடந்து கொள்ளும் பண்பை இழந்தவருக்கு தோல்வியே கிட்டும். அது தன்னோடு தொடர்பான மற்றும் பிறருடன் தொடர்பான விவகாரங்களை கையாள்வதாத இருந்தாலும் அவை அனைத்திலும் நன்மைகள்; இழக்கப்பட்டவராகவே அவர் காணப்படுவார்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • மென்மையின் சிறப்பு அதனை பண்பாக கொள்வதை ஊக்கப்பத்தியிருத்தல், கடுமையும் வன்மமும் கண்டிக்கப்பட்டிருத்தல்.
  • மென்மையானது மூலமே ஈருலக நலன்களும்; ஒழுங்கு பெற்று விரிவடைய துணைபுரிகிறது அதே வேளை கடுமையும் வன்மமும் அவைகளுக்கு எதிரானது.
  • மென்மையானது, நற்குணம் மற்றும் அமைதி; ஆகியவற்றின் விளைவால் ஏற்படுவதாகும். (கடுமையானது)வன்மமானது கோபம் மற்றும் முரட்டுத்தனத்தின் விளைவால் ஏற்படுவதாகும். இதனால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மென்மையை பாராட்டி மிகைப்படுத்தி குறிப்பிட்டுள்ளார்கள்.
  • ஸுஃப்யான் அஸ்ஸவ்ரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது தோழர்களிடம், மென்மை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது விடயங்களை அவற்றிற்குரித்தான இடங்களில் வைப்பதாகும்: கடுமையை அதற்குரிய இடத்திலும், மென்மையை அதற்குரிய இடத்திலும், வாளை அதற்குரிய இடத்திலும், சாட்டையை அதற்குரிய இடத்திலும் வைப்பதை குறிக்கும் என்று கூறினார்கள்.