இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் அல்லது முஃமின் வுழூ செய்யும் விதமாக, முகத்தைக் கழுவினால், அவர் தனது இரு கண்களாலும் பார்த்த அனைத்து சிறிய பாவங்களும் கழுவிய பின்னர் விழும் நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது முகத்திலிருந்து வெளியேறிவிடும் என்றும், அவர் தனது இரு கைகளையும் கழுவினால், அவரது இரு கைகளும் செய்த அனைத்து சிறிய பாவங்களும் கழுவிய பின்னர் விழும் நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது இரு கைகளையும் விட்டு வெளியேறிவிடும் என்றும், அவர் இரு கால்களையும் கழுவினால், அவர் தனது இரு கால்களாலும் நடந்துசென்ற அனைத்து சிறிய பாவங்களும் கழுவிய பின்னர் விழும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - வெளியேறி விடும் எனவும், இவ்வாறே அவர், வுழூ நிறைவடையும் போது, சிறிய பாவங்களை விட்டும், தூய்மையடைந்த ஒருவராக வெளியேறுவார் எனவும் தெளிவு படுத்துகின்றார்கள்.