நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சுத்தம்- வுழுவின் சட்டங்களின் சிலவற்றை இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அவை பின்வருமாறு: முதலாவது: வுழு செய்யும் ஒருவர் நாசுக்கு நீர் செலுத்தி அதனை சிந்த வேண்டும். இரண்டாவது: சிறுநீர் கழித்த ஒருவர் அதனை நீர் அல்லாத கல் அல்லது அதன் நிலையிலுள்ள பொருட்களால் சுத்தம் செய்து, நீக்கிவிட நாடினால் அதனை ஒற்றைப்படையாக செய்ய வேண்டும். அதன் குறைந்தபட்ச எண்ணிக்கை மூன்றாகும். மூன்றாவது : இரவுத் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தவர் தனது இரு கைகளையும் பாத்திரத்திற்குள் இட முன் மூன்று தடவைகள் கழுவிக்கொள்ளல் வேண்டும். ஏனென்றால் அவர் இரவில் தூங்குகையில் அவரின் கை எவற்வையெல்லாம் தொட்டது என்பது பற்றி அவருக்கு தெரியாது. ஆகவே அசுத்தம் அவற்றில் பட்டிருக்காது என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. சில வேளை ஷைத்தான் அவனைக் குழப்பி மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அல்லது நீரை மாசுபடுத்தக்கூடியவைகளை கொண்டு வந்திருக்கவும் வாய்ப்புள்ளது.