நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் சில ஒழுக்கங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது தனது மறையுறுப்பை வலது கையால் பிடிப்பதையும், முன்பின் துவாரங்களில் உள்ள அசுத்தத்தை வலது கையினால் நீக்குவதையும் தடை செய்துள்ளார்கள். ஏனெனில்; வலது கை நல்ல விடயங்களில் பயன்படுத்துவதற்குறியது என்பதினாலாகும். அதே போன்று குடிக்கும் பாத்திரத்தினுள் மூச்சு விடுவதையும் தடைசெய்துள்ளார்கள்.