நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதர் தனது இடக்கரத்தால் சாப்பிடுவதைக் கண்டு வலது கரத்தால் சாப்பிடுமாறு கட்டளைப்பிறப்பித்தார்கள். அதற்கந்த மனிதர் தனக்கு முடியாதென ஆணவத்துடனும் பொய்யாகவும் பதில் கூறினார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வலது கையால் உண்பது தடுக்கப்பட வேண்டுமென பிரார்த்தனை புரிந்தார்கள். உடனே அல்லாஹ் தனது நபியின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான். அதனால் அவரின் வலது கை செயலிழந்து போனது. அதன் பிறகு அவரால் உண்பதற்கோ குடிப்பதற்கோ வாயின் அருகில் வலக்கரத்தை உயர்த்த முடியவில்லை.