சிறு நீர் அல்லது மலம் கழிக்க நாடுபவர் கிப்லாத் திசையையை முன்னோக்கி அல்லது பின்னோக்கி தனது தேவையை நிறைவேற்றுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடைசெய்தார்கள். மாறாக அவர் அத்திசையை விட்டு விலகி கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமர்ந்து தனது இயற்கைத்தேவையை நிறைவேற்றுமாறு குறிப்பிடுகிறார்கள். அதாவது இது மதீனா வாசிகளின் கிப்லாத் திசை உள்ளோர் இவ்வாறு செய்தல் வேண்டும். இவர்கள் அல்லாதோர் அவர்களின் நோக்கும் கிப்லாத் திசையை விட்டு விலகி மாற்றுத்திசையை நோக்கி அமர்தல் வேண்டும். தொடர்ந்தும், அபூஅய்யூப் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகையில் அவர்கள்; ஷாம் தேசத்திற்கு சென்றிருந்த போது அங்கே இயற்கைத்தேவையை நிறைவேற்றுவதற்கென தனியான கழிவறைகள் காணப்பட்டதாகவும் அவை கிப்லா திசைநோக்கி அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கிறார்கள். அவர்கள் அக்கழிவறைகளை பயன்படுத்தும் போது தங்களது உடலை கிப்லாத்திசையை விட்டு சற்று விலக்கி அமர்ந்தாகவும் அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரியதாகவும் குறிப்பிடுகிறார்கள்.