நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குத்பதுல் ஹாஜாவை தங்களுக்கு கற்றுத் தந்ததாக இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். குத்பதுல் ஹாஜா என்பது திருமண உரை மற்றும் ஜும்ஆ உரை மற்றும் இதுபோன்ற உரைகளையும், விசேட நிகழ்வுகளை ஆரம்பிக்கும் போதும் கூறும் வார்த்தைகளைக் குறிக்கும். இந்த குத்பாவானது எல்லா வகையான புகழுக்கும் பாராட்டுதளுக்கும் அல்லாஹ் தகுதியான்வன் ; என்பதை தெளிவுபடுத்தி, இணையில்லா ஏகனாகிய அவனிடம் உதவி கோரல், பாவங்களை மறைத்து அதனை அழித்து விடுவதற்கும் உதவி கோருதல், மற்றும் எல்லா வகையான கெடுதிகளை விட்டும் பாதுகாப்புத் தேடி அவனிடம் ஒதுங்குதல் போன்ற பல உன்னதமான விடயங்களை உள்ளடக்கியுள்ளது. நேர்வழியானது அல்லாஹ்வின் கைவசம் உள்ள விடயம் என்பதையும் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே யாருக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டுகிறானோ அவனை வழிதவறச் செய்பவன் எவருமில்லை. யாரை அல்லாஹ் வழி தவறச்செய்து விடுகிறானோ அவனை நேர்வழிப்படுத்த எவரும் கிடையாது. பின் அவர்கள் தவ்ஹீதின் மூலம் சான்று பகர்தல், அதாவது உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாருமில்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் தூதருமாவார் என தூதுத்துவச் சான்றினையும் குறிப்பிடுகின்றார்கள். இந்த குத்பாவை அல்லாஹ்வின் திருமுகம் நாடி அவனின் கட்டளைகளை ஏற்று அவன் தடுத்தவற்றை தவிர்ந்தும் இருக்குமாறும் அல்லாஹ்வை பயப்பாடுமாறும் கூறுகின்ற மூன்று வசனங்களை கூறி முடித்துள்ளார்கள். யார் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறாரோ அவர்களின் சொல்லும் செயலும் சீர்பெற்று பாவங்கள் மன்னிக்கப்பட்டு இவ்வுலகில் மனமான வாழ்வு கிட்டவும், மறுமையில் சுவர்க்கத்தை வெற்றி கொள்ளவும் காரணமாக அமையும்.