நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது சிறிய தந்தை மரணத் தருவாயில் இருக்கும் நிலையில் அவரிடம், கலிமாவை மொழியுமாறு வேண்டிக்கொண்டார்,அவ்வாறு செய்தால் அவருக்கு மறுமை நாளில் பரிந்துரை செய்வதோடு அவர் முஸ்லிம் என சாட்சி கூறுவதாகவும் குறிப்பிட்டார்கள். மரண பயம் மற்றும் இயலாமை காரணமாக அவர் இஸ்லாத்தை தழுவினார் என குறைஷியர் கண்டித்துவிடுவர் என்ற பயத்தினால் அவர் ஷஹாதா கலிமாவை மொழிய மறுத்துவிட்டார். மேற்குறிப்பிட்ட விடயம் மாத்திரம் இல்லாதுவி;;ட்டால் ஷஹாதாக் கலிமாவைக் கூறி நபியின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன்; நபியின் எதிர்பார்ப்பை அவர் விரும்பியது போல் தான் நிறைவேற்றியிருப்பார் என்று கூறினார்.உடனே அல்லாஹ் தனது நபிக்கு 'இஸ்லாத்தை ஏற்கச்செய்வதற்கான வாய்ப்பை உம்மால் வழங்க முடியாது அல்லாஹ்வே நேர்வழியை ஏற்று நடப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறான்.' என்ற கருத்தை பிரதிபளிக்கும் அல்குர்ஆன் வசனத்தை இறக்கினான். இந்த அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப்பொருத்தவரை மக்களுக்கு நேர்வழியை தெளிவுபடுத்தி அதன் பால் அழைப்புவிடுப்பது தவிர வேறு பொறுப்பு கிடையாது.