இந்நபிமொழியில் ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய சில கடமைகள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள். அந்தக்கடமைகளுள் முதலாவது ஒருவர் உமக்கு ஸலாம் கூறினால் அவருக்கு பதிலளித்தல் ஆகும். இரண்டாவது கடமை: நோயாளியை சுகம் விசாரித்தல். மூன்றாவது கடமை: ஜனாஸாவை வீட்டிருந்து தொழுமிடம் வரைக்கும்,தொழுமிடத்திலிருந்து அவரை அடக்கம் செய்யவதற்காக மக்பரா –அடக்கஸ்தளம் வரை பின்தொடரந்து செல்லுதல். நான்காவது கடமை : ஒருவர் வலீமா,மற்றும் வலீமா அல்லாத நிகழ்வுக்கு அழைப்பு விடுத்தால் அதற்கு பதில்அளித்தல். ஐந்தாவது கடமை : தும்மியவருக்கு பதிலளித்தல். அதாவது தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் அதனைக் செவிமடுத்தவர் யர்ஹமுகல்லாஹ் என்று கூறவேண்டும். அதற்கு தும்மியவர் யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும் என்று கூற வேண்டும்.