அபூ ஹூறைரா ரழியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனது கையினாலோ அல்லது தனது ஆடையாலோ தம் வாயின் மீது வைத்து சப்தத்தை குறைத்துக்கொள்பவராக இருந்தார்கள். சரியானது - இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
explain-icon

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மும் போது பின்வரும் விடயங்களை கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள் : முதலாவது: வாயிலிருந்தோ அல்லது தனது மூக்குத்துவராத்திலிருந்தோ தனக்கு அருகாமையில் உள்ளவரை தொந்தரவு படுத்துவிதமாக ஏதாவது வெளிவராதாவாறு தனது கையை அல்லது தனது ஆடையை வாயின் மீது வைத்துக்கொள்வார்கள். இரண்டாவது: சப்பதம் உயராது குறைத்துக் கொள்வார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • தும்மலின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டல் தெளிவு படுத்தப்படுட்டுள்ளமை இதனை முன்மாதிரியாகக் கொண்டு நடந்து கொள்ளுதல்.
  • வாயிலிருந்தோ அல்லது தனது மூக்குத்துவராத்திலிருந்தோ தனக்கு அருகாமையில் உள்ளவரை தொந்தரவு படுத்துவிதமாக ஏதாவது வெளிவராதாவாறு துணியை அல்லது கைகுட்டையை அல்லது அது போன்ற ஒன்றை வாயின் மீது வைத்து மூடிக்கொள்வது வரவேற்கத்தக்க விடயமாகும்.
  • தும்மும் போது சப்தத்தைக் குறைப்பது அவசியமாகும் அவ்வாறு செய்வது சிறந்த பண்படாகவும் ஒழுக்கம் நிறைந்த அம்சமாகவும் உள்ளது.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு