நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: விசுவாசிகளுக்கு - அல்லது என்னுடைய சமுதாயத்திற்கு- சிரமமாக இருக்கும் என்று இல்லையென்றிருந்தால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தியிருப்பேன். சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

தனது சமுதாய விசுவாசிகளுக்கு சிரமமாக இருக்கும் என்ற பயம் இல்லையென்றிருந்தால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தியிருப்பதாக நபியவர்கள் இங்கு கூறுகின்றார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • நபி (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்துடன் மிருதுவாக நடந்துகொண்டுள்ளதோடு, அவர்களுக்கு சிரமம் ஏற்படுவதைப் பயந்துள்ளார்கள்.
  • அடிப்படையில் நபி (ஸல்) அவர்களின் ஏவல்கள் கடமைகளாகவே எடுத்துக்கொள்ளப்படும்; அது ஸுன்னா என்பதை வேறு ஒரு ஆதாரம் உணர்த்தினாலே தவிர.
  • தொழுகையின் போது பல் துலக்குவது ஸுன்னவும் சிறப்புக்குரியதுமாகும்.
  • இப்னு தகீக் அல் ஈத் (ரஹ்) கூறுகின்றார்கள்: தொழுகைக்காக செல்லும் போது பல் துலக்குவது விரும்பப்படுவதற்கான காரணம், அது அல்லாஹ்வுடன் நெருக்கமாகும் சந்தர்ப்பமாக இருப்பதாகும். எனவே, வணக்கத்தின் கண்ணியத்தைப் போற்றும் விதத்தில், பூரண சுத்தமான நிலையில் இருப்பது அவசியமாகின்றது.
  • இந்த ஹதீஸ் பொதுவாக இருப்பதால், நோன்பாளியின் லுஹர், அஸர் போன்ற சூரியன் சாய்ந்த பின்னரான தொழுகைகளும் இதனுள் உள்ளடங்கும்.