நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களில் ஒருவர் வுழூ செய்து, பின்னர் தனது காலுறைகளை அணிந்துகொண்டால், அவற்றுடனேயே தொழட்டும். அவற்றின் மீது மஸ்ஹு செய்துகொள்ளட்டும். பின்பு – அவர் நாடினால் - குளிப்புக் கடமையாகிவிட்டாலே தவிர, அதனைக் கழற்றவேண்டியதில்லை. சரியானது - இதனை இமாம் அத்தாரகுத்தனீ பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் வுழூ செய்த பின்னர் தனது காலுறைகளை அணிந்து, அதற்குப் பின்னர் வுழூ முறிந்து மீண்டும் வுழூ செய்ய நாடினால், - அவர் விரும்பினால் - அவ்விரண்டின் மீதும் மஸ்ஹு செய்துவிட்டு, அவற்றுடனேயே தொழலாம் என்றும், குறிப்பிட்ட காலத்திற்கு அவற்றைக் கழற்றாமல் இருக்கலாம் என்றும் தெளிவுபடுத்துகின்றார்கள். ஆனால், அவருக்குக் குளிப்புக் கடமையாகவிட்டால், காலுறையைக் கழற்றிவிட்டுக் குளிக்கவேண்டும்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • காலுறைகளை முழுமையான சுத்த (வுழூ) நிலையில் அணிந்தால் மாத்திரமே மஸ்ஹு செய்யலாம்.
  • ஊரிலேயே இருப்பவர் ஒரு நாள் முழுவதும், பயணத்தில் இருப்பவர் மூன்று நாட்கள் முழுவதும் மஸ்ஹு செய்யலாம்.
  • காலுறைகள் மீது மஸ்ஹு செய்வதென்பது, பெருந்தொடக்குக்கு அல்லாமல், சிறுதொடக்குக்கு மாத்திரம் குறிப்பானதாகும். பெருந்தொடக்கைப் பொறுத்தவரை மஸ்ஹு செய்யமுடியாது. மாறாக, காலுறைகளைக் கழற்றிவிட்டு, பாதங்களைக் கழுவுவது அவசியமாகும்.
  • செருப்புக்கள், காலுறைகள் போன்றவை சுத்தமாக இருந்து, அவற்றால் பள்ளிவாசலுக்கோ, தொழுபவர்களுக்கோ தொந்தரவு இல்லாமல் இருக்கும் பட்சத்தில் - யூதர்களுக்கு மாறுசெய்யும் நோக்கில் - அவற்றுடன் தொழுவது விரும்பத்தக்கதாகும். ஆனால் விரிப்புக்கள் இடப்பட்டிருக்கும் பள்ளிவாசலில் அவ்வாறு தொழக்கூடாது.
  • காலுறைகளில் மஸ்ஹு செய்வதென்பது, இந்த சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள இலகுபடுத்தல் சலுகைகளில் ஒன்றாகும்.
explain-icon

பிரிவுகள்

explain-icon

மேலதிக விபரங்களுக்கு