நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களுடன் அமர்ந்திருந்தார்கள் அப்போது அவர்கள் மக்களிடமிருந்து அறிவு அபகரிக்கப்பட்டு உயர்த்தப்படும் காலம் ஒன்று வருவது குறித்து குறிப்பிட்டார்கள். அப்போது அங்கிருந்த ஸியாத் இப்னு லபீத் அல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆச்சரியப்பட்டு நபியவர்களிடம் அறிவு அகன்று எம்மிடமிருந்து எப்படி தொலைந்து போகும் ? நாம் அல்குர்ஆனை ஓதி அதனை மனனம் செய்கிறோம்.உண்மையில் அதனை ஒதிவருகிறோம் எமது மனைவியர், பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுக்கிறோமல்லாவா! என்று அவர் நபியவர்களிடம் கேட்க, நபியவர்கள் ஆச்சரியமடைந்தவர்களாக ஸியாதே (உன்னை உனது தாய் இழப்பதால் கவளைக்கொள்ளாதிருக்கட்டும்) என்று கூறிவிட்டு, நான் உங்களை மதீனாவாசிகளின் அறிஞர்களில் ஒருவராக எண்ணியிருந்தேன், எனக் கூறினார்கள் அதன் பின் நபிஸல்லல்லாஹு அறிவு இழக்கப்படுதல்என்பது அல்குர்ஆன் இழந்து போவதல்ல.மாறாக அறிவு இழக்கப்படுவது என்பது அதன்படி செயல்படுவது இல்லாமல் போவதாகும். வேதங்களிலிருந்து அறிந்தவற்றை நடைமுறைப்படுத்துதல்,செயற்படுத்துதல் இல்லாததின் காரணமாக யூத கிறிஸ்தவர்களிடத்தில் தௌராத் இன்ஜீல் வேதங்கள் இருந்தும் அவை பயனளிக்கவுமில்லை. அதன் கருத்துக்களால் அவர்கள் பயன் பெறவுமில்லை.