இறை விசுவாசி (முஃமின்); கப்ரில் விசாரிக்கப்படுவார். கப்ரில் -மண்ணறையில்- விசாரிக்கப்படுவதற்கென பொறுப்புச் சாட்டப்பட்ட முன்கர் நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் விசாரணை நடத்துவர். அவர்கள் இருவரினதும் பெயர்கள் பல ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளன. அப்போது அவர், அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படுபவன் வேறு எவருமில்லை. முஹம்மத் -ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்- அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று உறுதிமொழி கூறுவார். இதனையே அல்லாஹ் அல் கவ்லுஸ் ஸாபித் (உறுதியான வார்த்தை) என பின்வரும் வசனத்தில் கூறிப்பிடுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். அந்த வசனம் : "(இறை)நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ்; இம்மையிலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச்செய்வான்'' (இப்ராஹீம்: 27)