'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் இஸ்லாத்திற்கு நீண்ட வலைவில்லாத நேரான பாதையொன்றை - உவமையாகக் குறிப்பிடுவதை இந்த ஹதீஸ் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள். பாதையின் இரு ஓரங்களும்; இரு சுவர்களால்,மதில்களால் மூடப்பட்டுள்ளது. அது அல்லாஹ்வின் வரம்புகளை,வரைமுறைகளைக் காட்டும்.அந்த இரு மதில்களிலும் திறந்த பல வாயில்கள் காணப்படும் அவைகள் அல்லாஹ் தடுத்த விடயங்களாகும். அந்த வாயில்கள் யாவும் திரைசீலைகளால் மூடப்பட்டிருக்கும் அப்பாதையில் செல்வோருக்கு வெளியே தெரியமாட்டாது? குறிப்பிட்ட அந்தப்பாதையின் வாயிலின் ஆரம்பாத்தில் நின்று கொண்டு ஒருவர் வழிகாட்டுவார். அவர்கள் அப்பாதையில் செல்லவிருப்போர் அனைவருக்கும்; அங்கும் இங்கும் வலைந்து செல்லாது இப்பாதையில் நேராக செல்லுங்கள் எனக் கூறுவார்.இங்கு குறிப்பிடப்பட்ட அழைப்பாளர் என்பது அல்லாஹ்வின் வேதத்தைக்கு குறிக்கும். இன்னொருவர் பாதைக்கு மேலே இருப்பார், அவர் பாதையில் செல்பவர் வாயிலில் உள்ள திறைச்சீலையை சிறிது அகற்றி பார்க்க எத்தனிப்பார் அப்போது அவர் அவர்களை கண்டிப்பார்; . அவர் அவர்களிடம் உங்களுக்கு என்ன நேர்ந்தது அதனைத் திறக்க வேண்டாம் திறந்தால் அதனுள் நுழைவதை ஒரு போதும் உங்களால் தடுத்துக்கொள்ளவே முடியாது என்று கூறுவார். இரண்டாவது அழைப்பாளர் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தில் இருந்து வழிகாட்டும் அல்லாஹ்வின் உபதேசியாகும்.