ஒருவரது ஈமான் பூரணமாக அமைய வேண்டுமாயின் நபியவர்கள் ஏவிய கட்டளைகளை மனமுவந்து விரும்பி, அவர் தடுத்தவற்றை வெறுத்து, அவர்கள் கொண்டு வந்ததற்கு ஏற்ப தனது நேசத்தை ஆக்கிக்கொள்ளும் வரை ஒரு மனிதன் முழுமையான ஈமான் கொண்டவராக மாட்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் விளக்குகிறார்கள்.