பாலை வனத்தில் வசிக்கும் ஒரு நாட்டுப்புற அரபி நபியவர்களிடம் வந்து மறுமை நாள் நிகழும் நேரம் குறித்து வினவினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவரிடம் நீ அதற்காக நல்லமல்களில் எவற்றை தயார்செய்து வைத்துள்ளாய்? என்று கேட்டார்கள். கேள்வி கேட்டவர் நான் அதற்கென பெரிதாக எந்தவொரு நற்காரியத்தையும் செய்யவில்லை என்றாலும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உளமாற தான் நேசிப்பதாக கூறினார். இது தவிர உளரீதியான, உடல் ரீதியான மற்றும் செல்வ ரீதியான எந்த ஒரு வணக்கத்தையும் அவர் குறிப்பிடவில்லை. ஏனெனில் இவையெல்லாம் அடிப்படையான நேசத்தின் விளைவாக வருபவை. அத்துடன் உண்மையான நேசமானது நல்லமல்களின் பால் முயற்சிப்பதை தூண்டக் கூடியதாக இருக்கும். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் சுவர்க்கத்தில் இருப்பாய் என்று கூறினார்கள். இந்த நன்மாரயத்தின் (நற்செய்தி) மூலம் ஸஹாபாக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். தொடர்ந்தும் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகையில், தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் அபூபக்ர் உமர் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரையும் நேசிக்கிறேன். தனது அமல்கள் அவர்களின் அமல்களின் அளவுக்கு இல்லையென்றிருந்தாலும் அவர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன் என்றார்கள்.