நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுத முறையின் ஒரு பகுதியை அபூஹுரைரா அறிவிக்கிறார்கள். நபியவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் இஹ்ராம் தக்பீர் கூறுவார்கள், பின்னர் ருகூவிற்கு செல்லும்; போதும், ஸுஜூதிற்கு செல்லும் போதும் ஸுஜூதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் இரண்டாவது ஸுஜூதிற்கு செல்லும் போதும் அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும், மூன்று மற்றும் நான்கு ரக்அத்துக்கள் உள்ள தொழுகைகளில் முதலாவது தஷஹ்ஹுத் ஓதியதின் பின் நிலைக்கு வரும்போதும் தக்பீர் கூறுவார்கள். இவ்வாறே தொழுகை நிறைவேற்றி முடியும் வரையில் செய்வார்கள். ருகூவிலிருந்து நிலைக்கு வரும்போது 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ்' என்றும் நிலைக்கு வந்ததும் 'ரப்பனா வலகல் ஹம்து' என்றும் கூறுவார்கள் என அவர்கள் தெரிவிக்கிறார்கள். அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு தொழுகையை முடித்ததன் பின் எனது ஆன்மா யாரின் கைவசம் உள்ளதோ அவன்மீது சத்தியமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுகைக்கு ஒப்பாகும் அளவிற்கு தொழுகை நடாத்தினேன். நபியவர்கள் இவ்வுலகைவிட்டு பிரியும் வரை அவர்களின் தொழுகை இவ்வாறே இருந்தது எனக் கூறினார்கள்.