சில மனிதர்கள் நபித்தோழர் ஒருவரிடம் வந்து, நபியவர்கள் பயன்படுத்திய பிரசங்க மேடை –மின்பர்- எதனால் செய்யப்பட்டது? என்று விசாரித்து தகராறிலும் வாதத்திலும் ஈடுபட்டார்கள். அதற்கு அந்த ஸஹாபி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தச்சு வேலை தெரிந்த அடிமையைப் பெற்றிருந்த ஒரு அன்ஸாரிப் பெண்ணிடம் : 'நான் மக்களுக்கு உரையாற்றும் போது அமர்வதற்காக உங்கள் தச்சு வேலை தெரிந்த அடிமையிடம் ஒரு மின்பரை அமைத்து தருமாறு கூறுங்கள்' என்று வேண்டிக் கொள்ள அதனை அப்பெண்மணி ஏற்றுக் கொண்டு, தனது அடிமையிடம் தர்பாஉ எனும் மரத்தினால் மின்பரை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு செய்து தருமாறு பணித்தாள். அதனை செய்து முடித்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அப்பெண் அனுப்பி வைத்தாள். அதனை நபியவர்கள் பள்ளியில் உரிய இடத்தில் வைக்குமாறு பணித்தார்கள் பிறகு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதன் மீது ஏறி தக்பீர் கூறி தொழுதார்கள், பின்னர் அவ்கள்; அதன் மேல் இருந்து ருகூஉ செய்தார்கள். பின்னர் அவர்கள் பின்னோக்கி கீழே வந்து, மின்பர் மேடையின் அடியில் ஸுஜூத் செய்தது விட்டு அவர்கள் திரும்பிச் சென்றாரகள். இவ்வாறு அவர்கள் தொழுகையை முடித்ததன் பின் மக்களை முன்னோக்கி, மக்களே! நான் இந்த மிம்பரை செய்தது உங்களுக்கு இமாமத் செய்யவும், எனது தொழுகை முறையை கற்றுத்தரவுமே என்று கூறினார்கள்.