நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையின் போது மூன்று நிலைகளில் தோல்பட்டைக்கு நேராக தனது இரு கைகளையும் உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள். அதாவது:தோள்பட்டை என்பது மூட்டுக்கும் கைக்கும் இடைப்பட்ட பகுதி. முதலாவது இடம் : தொழுகையின் ஆரம்பத் தக்பீரான இஹ்ராம் தக்பீர் கூறுகையில். இரண்டாவது இடம் : ருகூஉ செய்ய தக்பிர் கூறும் போது , மூன்றாவது : ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் ரப்பனா வலகல் ஹம்த்' என்று கூறும் போது. பொருள் : தன்னைப் புகழ்ந்தவனின் புகழுரையை அல்லாஹ் செவிமடுத்தான். எங்கள் இரட்சகனே புகழனைத்தும் உனக்கே உரியது. ஸஜ்தாவைத் தொடங்கும்போதோ அல்லது அதிலிருந்து எழும்போதோ நபியவர்கள் கைகளை உயர்த்தமாட்டார்கள்.