மனிதர்களில் மிகக்கேவளமானவன் தொழுகையில் களவு செய்பவர் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். தொழுகைத் திருடனுக்கு மாற்றமாக பிறரின் செல்வத்தை திருடுபவன் சில வேளை அதனால் பயனடைவான், ஆனால் தொழுகையை திருடுபவன் தனக்கு கிடைக்க வேண்டிய கூலி மற்றும் வெகுமதியை அவனாகவே இழந்து கொள்கிறான். இதனால்தான் ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவன் தனது தொழுகையை திருடுவது எப்படி என வினவ அதற்கு 'தொழுகையின் ருகூஉ மற்றும் ஸுஜூதை முறையாக செய்யாமலிருப்பது என பதிலளித்தார்கள். அதாவது ருகூஉ மற்றும் ஸுஜூதை மிகவும் விரைவாக நிறைவேற்றுவதன் மூலம் அவற்றை உரிய முறையில் நிறைவேற்றாததை இது குறிக்கிறது.